#சூழல்கள் தவறாக்கி
வாழ்முறையைக் கெடுத்தோம்.
வாழ்நிலையை அழித்தோம்.
#பவானி கெட்டுப் போனாள்
காவிரி வரவே இல்லை.
நொய்யல் பொய்த்துவிட்டது
தாமிரபரணி கறுத்துவிட்டது
ஆழியாறு சிறுத்துவிட்டது
பரம்பிக்குளம் வறண்டுவிட்டது.
#மலைச்சரிவுகளில் மண் சரிவுகள்
சாலை விரிவாக்கத்தில் மரச்சரிவுகள்.
#தொழிற்சாலைகள் பெருக்கத்தில்
வாணியம்பாடியில் தோல்பதனிட்டும்
சென்னை மணலியில் எண்ணெய் சுத்திகரிப்பும்
திருநெல்வேலி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டும்
நாகர்கோவிலில் அணு உலையும்
ஈரோடு திருப்பூரில் சாயங்களும் பனியன் ஆலைகளும்
கோவையில் பஞ்சு மில்லும்
மொத்தத்தில் தமிழ்நாட்டை...
தமிழோடு சேர்த்து
சூழலையும் மாசுபடுத்தியாயிற்று.
பஞ்ச பூதங்களும் அஞ்சுமே !
#கடைக்கோடி கிராமத்திற்கும் - அத்தனை
கிருமிகளையும் கொண்டு சேர்த்தாயிற்று.
#கொசுக்களும் எலிகளும் பெருகின - கடைகளில்
கோழிகளும் ஆடுகளும் தலைகீழாய்த் தொங்கின.
காற்றும், காடும் தீப்பிடிக்க ...
பறவைகளும் விலங்குகளும் தீக்குளித்தன!
சரணாலயங்கள் மரணாலயங்களாக !
#நீர்ச்சலைகள் எல்லாம் நெடுஞ்சாலைகளாகின
தார்ச்சாலைகள் நிலத்தின் கருப்புத் தேமல்களாக !
#குளங்கள் எல்லாம் பேருந்து நிலையங்களாகின
வளங்கள் அழிந்து இரைச்சல் நிலையங்களாக !
#வீணாய்ப் போகும் வெயில்
சேறாய்ப் போகும் மழை
அழுக்காய்ப் போகும் காற்று
மண்ணாய்ப் போகும் காடு
விரிசல் விடும் வானம் (மண்டலம்)
ஐம்பூதங்களை ஆக்கச் சக்தியாக
மாற்றுவிப்போம்! உயிர் போற்றுவிப்போம் !
#மீன்களையும் மீனவர்களையும் காப்போம் !
கடல்நீரை மலிவு விலையில் குடிநீராக்கி
மழைநீரைக் குளங்களில் சேமித்து
பாதாளச் சாக்கடைகளை வெட்டி
நோய்களைக் கொன்று
வெயிலிலிருந்தும் அலைகளிலிருந்தும்
மின்சக்தியை உறிஞ்சி
அளவோடு சுகிப்போம் !
#நெகிழிக் குப்பைகள் இன்றி
காகிதப் பைகளைக் கைகளில் சுமந்தால் ...
#கனரக வாகனத்தை விலக்கிவிட்டு
மிதிவண்டியை மிதித்தால் ...
#சாண எரிவாயுவும், சூரிய அடுப்பும் செய்தால்...
பஞ்சபூதங்களும் கொஞ்சுமே !
#கோடி கோடி மரங்களை விதைத்து - அவற்றை
ஓடி ஓடி மனங்களிலும் விதைத்தால் ...
மக்கள் பெருக்கத்தையும்
மாசுகள் பெருக்கத்தையும்
நகர நெருக்கடியின் மனிதனைக்
கிராமத்திற்கு விரித்தால்....
ஒழுக்கமும் சுத்தமும் கொண்டால்
சமூக நீதியோடு சூழல் நீதியும் காக்கப்படுமே !
அஞ்சும் பஞ்சபூதங்களும் கொஞ்சுமே !
வாழ்முறையைக் கெடுத்தோம்.
வாழ்நிலையை அழித்தோம்.
#பவானி கெட்டுப் போனாள்
காவிரி வரவே இல்லை.
நொய்யல் பொய்த்துவிட்டது
தாமிரபரணி கறுத்துவிட்டது
ஆழியாறு சிறுத்துவிட்டது
பரம்பிக்குளம் வறண்டுவிட்டது.
#மலைச்சரிவுகளில் மண் சரிவுகள்
சாலை விரிவாக்கத்தில் மரச்சரிவுகள்.
#தொழிற்சாலைகள் பெருக்கத்தில்
வாணியம்பாடியில் தோல்பதனிட்டும்
சென்னை மணலியில் எண்ணெய் சுத்திகரிப்பும்
திருநெல்வேலி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டும்
நாகர்கோவிலில் அணு உலையும்
ஈரோடு திருப்பூரில் சாயங்களும் பனியன் ஆலைகளும்
கோவையில் பஞ்சு மில்லும்
மொத்தத்தில் தமிழ்நாட்டை...
தமிழோடு சேர்த்து
சூழலையும் மாசுபடுத்தியாயிற்று.
பஞ்ச பூதங்களும் அஞ்சுமே !
#கடைக்கோடி கிராமத்திற்கும் - அத்தனை
கிருமிகளையும் கொண்டு சேர்த்தாயிற்று.
#கொசுக்களும் எலிகளும் பெருகின - கடைகளில்
கோழிகளும் ஆடுகளும் தலைகீழாய்த் தொங்கின.
காற்றும், காடும் தீப்பிடிக்க ...
பறவைகளும் விலங்குகளும் தீக்குளித்தன!
சரணாலயங்கள் மரணாலயங்களாக !
#நீர்ச்சலைகள் எல்லாம் நெடுஞ்சாலைகளாகின
தார்ச்சாலைகள் நிலத்தின் கருப்புத் தேமல்களாக !
#குளங்கள் எல்லாம் பேருந்து நிலையங்களாகின
வளங்கள் அழிந்து இரைச்சல் நிலையங்களாக !
#வீணாய்ப் போகும் வெயில்
சேறாய்ப் போகும் மழை
அழுக்காய்ப் போகும் காற்று
மண்ணாய்ப் போகும் காடு
விரிசல் விடும் வானம் (மண்டலம்)
ஐம்பூதங்களை ஆக்கச் சக்தியாக
மாற்றுவிப்போம்! உயிர் போற்றுவிப்போம் !
#மீன்களையும் மீனவர்களையும் காப்போம் !
கடல்நீரை மலிவு விலையில் குடிநீராக்கி
மழைநீரைக் குளங்களில் சேமித்து
பாதாளச் சாக்கடைகளை வெட்டி
நோய்களைக் கொன்று
வெயிலிலிருந்தும் அலைகளிலிருந்தும்
மின்சக்தியை உறிஞ்சி
அளவோடு சுகிப்போம் !
#நெகிழிக் குப்பைகள் இன்றி
காகிதப் பைகளைக் கைகளில் சுமந்தால் ...
#கனரக வாகனத்தை விலக்கிவிட்டு
மிதிவண்டியை மிதித்தால் ...
#சாண எரிவாயுவும், சூரிய அடுப்பும் செய்தால்...
பஞ்சபூதங்களும் கொஞ்சுமே !
#கோடி கோடி மரங்களை விதைத்து - அவற்றை
ஓடி ஓடி மனங்களிலும் விதைத்தால் ...
மக்கள் பெருக்கத்தையும்
மாசுகள் பெருக்கத்தையும்
நகர நெருக்கடியின் மனிதனைக்
கிராமத்திற்கு விரித்தால்....
ஒழுக்கமும் சுத்தமும் கொண்டால்
சமூக நீதியோடு சூழல் நீதியும் காக்கப்படுமே !
அஞ்சும் பஞ்சபூதங்களும் கொஞ்சுமே !
No comments:
Post a Comment