இரவானதும்
நாய்கள் ஊளையிடுகின்றன
மந்திரக்கோலால்
அதனதன் கதவைத் திறந்து
அதனதன் வாசலில்
வந்தமர்ந்து கொள்கின்றன.
பகலில் எதிர்வருகையில்
என்னை ஒருபொருட்டாக..
கண்டுகொள்ளாத நாய்கள்
இருளில் சிறுஅசைவெனினும்
குரல் உயர்த்துகின்றன.
பிஸ்கட்டுகளை அள்ளி வீசுகின்றன
அவ்வப்போது சில எலும்புத்துண்டுகளையும் !
கவ்விக்கொண்டதால்
இப்பொழுதெல்லாம்
இரவானதும்
நானும் ஊளையிடுகிறேன்!
ஊஉ... ஊ... ஊ... ஊஉ..
No comments:
Post a Comment