இலக்கியங்களில் பல முக்கியக் கதாபாத்திரங்கள் தொன்மத் தகுதியை எட்டியுள்ளன.
இராமன், சீதை, இராவணன், கும்பகர்ணன், கர்ணன், சகுனி, இன்னபிற. இவர்களைப்
போலவே, சிலப்பதிகார மாந்தர்களான கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரும்
தொன்மமாகியுள்ளனர். தொன்மப் பாத்திரங்களை நேர்மறை தொன்மப் பாத்திரங்கள்,
எதிர்மறை தொன்மப் பாத்திரங்கள் என்று வகைப்படுத்தலாம். இராமன், சீதை,
கர்ணன், கண்ணகி ஆகியோர் நேர்மறை தொன்மப் பாத்திரங்களாக
உருவகப்படுத்தப்படுகின்றனர். இராவணன், கும்பகர்ணன், கோவலன் ஆகியோர்
எதிர்மறை தொன்மப் பாத்திரங்களாக உருவகப் படுத்தப்படுகின்றனர். இதில்
மாதவியின் தொன்மப் பாத்திரம் சிக்கலானது. நேர்மறை என்றோ, எதிர்மறை என்றோ
குறிப்பிட்டுச் சொல்ல இயலாமல், அவரவர் வசதிக்கேற்ப மாதவியைக் குறிப்பிட
இயலும். பரத்தையர் குலத்தில் பிறந்தவள் என்று ஒற்றைப் பரிமாணத்தில் மாதவி
எதிர்நிலைத் தொன்மமாகிறாள். பரத்தையர் குலத்தில் பிறந்தாலும், கோவலன்
பிரிந்ததால் ‘துறவியானவள்’ என்கிறபொழுது நேர்நிலைத் தொன்மமாகிறாள்.
இன்றைய நடைமுறையில், மாதவி துறவியானதை மக்களில் யாரும் பொருட்படுத்திக் கொள்வதேயில்லை. அதேசமயம், மாதவி மணிமேகலையைத் துறவியாக்கியதை யாரும் சரியென ஏற்றுக்கொள்வது கடினமே.
மாதவி ‘பரத்தமை’ என்கிற தட்டையான குறியீடு மட்டும் இன்று வரை நிலைத்துவிட்டிருக்கிறது. மாதவி ‘கற்புடையவள்’ என்கிற கருத்து யார்மனதிலும் பதிந்தபாடில்லை. கற்புக்கு உதாரணமாக, மக்களிடத்தில் கண்ணகி, சீதை இருவர் மட்டுமே குறியீடாகின்றனர். கோவலனும், மாதவியும் கற்பில் பிறழ்ந்தவர்களாக நினைக்கப்படுகின்றனர். ஆண்களில் கற்புநிலை திரிந்தவர்களைக் ‘கோவலர்கள்’ என்றும், பெண்களில் கற்புநிலை திரிந்தவர்களை ‘மாதவிகள்’ என்றும் இன்றைய நடைமுறை வாழ்வில் மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
இன்றைய நிலையில் கற்பு என்பது ஒரு பொருட்டே அன்று என்பதைப் போல தமிழ் மாந்தர்கள் நிலைதடுமாறி, வழிதவறிச் செல்கின்றனர். நாள்தோறும் செய்தித் தாள்களில் இடம்பெறும் செய்திகள் மக்கள் ‘கற்பு’ என்கிற கருத்தாக்கம் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை இழந்துவிட்டனரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. திரைப்படங்களின் காட்சி சித்திரிப்புகளும், அலைபேசி, இணையதளம் முதலிய வசதிகளும், பெருகிவரும் பொருளாதாரத் தேவைகளும், மாறிவிட்ட கலாச்சார சிந்தனைகளும், மக்கள் வாழ்வில் கற்பு என்பதைக் கேலிக்குரியதாக்கிவிட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மக்கள் மொழியையும், கற்பையும் அலட்சியப்படுத்துவர்களாக மாறிவிட்டனர். அதற்காக, சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் கற்போடிருந்தனர் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. கற்புநிலையிலிருந்து விலக, மனதளவில் சிறிது பயம் கொண்டிருந்தனர் என்று சொல்ல இயலும். இன்றைய நிலைபோல் அன்று இருந்திருக்காது என்று மட்டும் நம்ப இயலும். அன்று ஆண்கள் மட்டுமே பெண்தேடி அலைபவர்களாக இருந்துள்ளனர் என்று இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சீவகன் எட்டுப் பெண்களை மணந்துள்ளான். ஆனாலும், மக்கள் மனதில் சீவகன் தொன்மப் பாத்திரமாக இடம்பெறவில்லை. கோவலன் ஒரே ஒரு பெண்ணைத் தேடிச் சென்றாலும், மக்கள் மனதில் அவன் பெற்ற இடம் வேறு. ‘ஆண் தேடியவர்கள்’ என்றவாறு இல்லாமல், ‘பரத்தமை’ என்கிற பெயரில் ‘பொருள் தேடியவர்கள்’ என்ற நிலையில் பெண்கள் இருந்திருக்கின்றனர்.
மாதவி நாட்டியம் தெரிந்தவள். அழகு மிக்கவள். யாழிசைக்க வல்லவள். பாடும் ஆற்றலைப் பெற்றவள். கணிகையர் குலத்தில் பிறந்தவள். ஆனாலும், கண்ணும், முலையும் மயக்கக் காட்டி ஆணை வசீகரிக்கத் தெரிந்தவள் என்ற நிலையிலேயே இன்று மாதவி நினைக்கப்படுகிறாள். ஆனால், மாதவி கணிகையர் குலத்தில் பிறந்து, கற்பு நெறியோடு வாழ்ந்தவள். கோவலன் பிரிந்து சென்றுவிட்டான் என்றதும் வருத்தப்பட்டு, அவனை அழைத்துவர முதலில் வசந்தமாலையைத் தூது (வேனிற்காதை) அனுப்புகிறாள். கோவலன் வரவில்லை என்றதும், மனம் மாறிவிடாமல், மறுபடியும் கௌசிகனைத் தூது (புறஞ்சேரி இறுத்த காதை) அனுப்புகிறாள். கௌசிகன் மாதவியின் மனம், மெய்வருத்தத்தை உரைக்கிறான்.
“பசந்த மேனியள் படர்நோய் உற்று
நெடுநிலை மாடத்து இடைநிலத்து ஆங்குஓர்
படைஅமை சேக்கைப் பள்ளியள் வீழ்ந்தும்
வீழ்துயர் உற்றோள்…… ……… ……” (புறஞ்சேரி., 68-71)
என்று மாதவியின் வருத்தத்தைக் கூறுகிறான். அப்படியும் கோவலன் வரவில்லை. கணிகையர் குலமரபிற்கு மாறாக, மாதவி தன் கணவனைப் பிரிந்து வருந்துகிறாள்.
இறுதியில், கோவலன் இறந்துபட்டதை அறிந்து, துறவியாகிறாள். எந்தக் கணிகை இதனைச் செய்யத் துணிவாள்? மாதவி சித்திராபதியிடம்,
“…………….. நற்றிறம் படர்கேன்
மணிமேகலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிக” (நீர்ப்படை., 104-106)
என்று பௌத்தப் பகலவனைச் சார்கிறாள். தான் மட்டுமல்லாது, மணிமேகலையையும் கணிகையர் கோலம் காணாது ஒழிக்கிறாள்.
பிறகெப்படி, அவளது கற்புநெறி மறக்கப்பட்டது. அவளது வாழ்வு முழுவதும் கோவலனைச் சார்ந்து, கண்ணகியைச் சார்ந்து மாற்றப்பட்டுள்ளது. கண்ணகி பட்ட பெருந்துயரம், அவளுக்கேற்பட்ட கொடு அவலம் ஆகியன மாதவிமீதான பார்வையை மாற்றிவிட்டது. மாதவி இல்லாவிட்டால், கோவலன் கண்ணகியைப் பிரிந்திருக்க மாட்டான் என்பது சாதாரண மக்களின் மன இயல்பு. கண்ணகியைப் போற்றுவதும், மாதவியைப் பழிப்பதும் வழக்கமாகிவிட்டது. மாதவியினுடைய கற்புத்திறம், துறவறம் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மாதவி கணிகை, குலத்தைக் கெடுக்க வந்தவள், பரத்தை என்பன மட்டும் நினைக்கப்பட்டது. மாதவி எதிர்நிலைத் தொன்மமாக்கப்பட்டாள்.
மக்கள் வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் மீறப்பட்டுவருகின்றன என்பதைச் செய்தித்தாள்கள்வழி அறியலாம். தவறு செய்யக்கூடிய பெண்ணை ‘மாதவி’ என்று இழிப்பதும் காணப்படுகிறது. உண்மையில் மாதவிக்கும் பரத்தமைக்கும் தொடர்பில்லை.

***
No comments:
Post a Comment